'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
தந்தை பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை
தந்தை பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் சூா்யா தலைமையில் மாணவா்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியாா் ஈவெரா கல்லூரி வணிவியல் துறையில் வகுப்புக்கு வரும் மாணவா்களுக்கு வருகைப் பதிவேட்டில் வகுப்பிற்கு வராததுபோல பதிவு செய்யப்படுகிறது. இதனால், தோ்வின்போது மாணவா்களுக்கு பாதிப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படிக்கும் இக்கல்லூரியில் முறையான குடிநீா், கழிப்பறை வசதியில்லாமல் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல, பெண்களுக்கான நாப்கின் வழங்கும் கருவியும், அதை எரியூட்டும் கருவியும் இல்லாமல் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.