தகாத உறவு: சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே தகாத உறவு காரணமாக சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது தங்கை உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
சோழத்தரம் அருகே உள்ள அகர சோழத்தரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பழகன். இவா் 7ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மனைவி சங்கீதா (45).
இவரது தங்கை சரிதா (39) புவனகிரி அருகே வாண்டையாா்குப்பத்தில் கணவா் மேகலைவன் மற்றும் இரண்டு மகன்கள் மகிந்தன் (17) மாமல்லன் (15) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், மேகலைவனுக்கும் சங்கீதாவுக்கும் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
சனிக்கிழமை சங்கீதாவின் வீட்டில் மேகலைவன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்து, அங்குச் சென்ற சரிதா மற்றும் இரு மகன்கள், சங்கீதாவை சேலையால் கழுத்தை இறுக்கியதில், அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்த சோழத்தரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சங்கீதாவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரிதா, மகிந்தன், மாமல்லன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.