செய்திகள் :

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

post image

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கு விற்பனையாகிறது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி பவுன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. 8 ஆம் தேதி பவுன் ரூ.75,760 என புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது.

அதன் பின்னர் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. திங்கள்கிழமை பவுன் ரூ.74,200-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.9,235-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.73,880-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,180-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.125-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.1.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

தில்லி முதல்வர் மீது தாக்குதல்: குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு!

The price of gold jewelry in Chennai fell by Rs. 440 per sovereign on Wednesday to sell at Rs. 73,440.

ஒண்டிவீரன் நினைவு நாள்: எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 254 ஆவது நினைவு நாளையொட்டி, ராணிப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி்சாமி ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்திய சுதந்தி... மேலும் பார்க்க

தில்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் ஒரே நாளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை(ஆக.20) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தில்லியில் உள்ள 32 பள்... மேலும் பார்க்க

விருத்தாசலம் அருகே கார் விபத்தில் 3 பேர் பலி; 3 பேர் காயம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே புதன்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், ஆதினேஷ், வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியில் அப்சல் கான் என்பவரது வீட்டில் ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக நிரம்பியுள்ளதால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.9 அடியாக புதன்கிழமை காலை உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 120.9 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,16,683 கன அடியாக ... மேலும் பார்க்க