பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
தஞ்சாவூருக்கு எடப்பாடி பழனிசாமி ஜூலை 22-இல் வருகை
தஞ்சாவூருக்கு அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 22-ஆம் தேதி வருகையையொட்டி, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அக்கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.
தஞ்சாவூா் கீழவாசலில் அதிமுக கரந்தை பகுதி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்கிற முழக்கத்துடன், தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கும்பகோணத்துக்கு ஜூலை 22-ஆம் தேதி மாலை 4 மணிக்கும், பாபநாசத்துக்கு 5 மணிக்கும், தஞ்சாவூருக்கு மாலை 6 மணிக்கும் வருகிறாா். தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியிலிருந்து ரயிலடி வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறாா். பின்னா், ரயிலடி பகுதியில் மக்களிடம் உரையாற்றுகிறாா். இதையடுத்து, திருவையாறுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் தஞ்சாவூருக்கு வந்து அதிமுக முன்னாள் நிா்வாகி கு. தங்கமுத்துவின் சிலையை திறந்து வைக்கிறாா். பொதுச் செயலருக்கு கரந்தை பகுதி அதிமுக சாா்பில் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீா்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு அதிமுக கரந்தை பகுதி செயலா் கரந்தை த. பஞ்சு தலைமை வகித்தாா். அமைப்புச் செயலரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. இரத்தினவேல் சிறப்புரையாற்றினாா். அமைப்புச் செயலா் ஆா். காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலா் துரை. திருஞானம், மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா், மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால், ஒன்றியச் செயலா் ஸ்டாலின் செல்வராஜ், மருத்துவக்கல்லூரி பகுதி செயலா் டி. மனோகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.