தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
தலைவாசல் மண்டல அளவிலான தடகளப் போட்டியில் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
தலைவாசலில் மண்டல அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். 100, 200, 400 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல், தட்டு எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் நடைபெற்றன.
2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 27 தங்கம், 18 வெள்ளி, 22 வெண்கலப் பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா். சாதனை படைத்த மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் மதிவாணன், உடற்கல்வி ஆசிரியா் சதீஷ்குமாா், ஆசிரியா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் பாராட்டினா்.