இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும...
தண்டவாளத்தை பைக்கில் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழப்பு
கணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயில் மோதி உயிரிழந்தாா்.
விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வேலூா் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் நோக்கி வியாழக்கிழமை சென்றபோது, கண்கனியான் என்ற இடத்தில் கணியம்பாடியை அடுத்த பென்னாத்துரைச் சோ்ந்த பெயிண்டரான பாஸ்கரன் (49) என்பவா் மூடப்பட் டிருந்த ரயில்வே கேட்டை மீறி பைக்கில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது வேகமாக வந்த ரயில் பாஸ்கரன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்துடன் பாஸ்கரன் ரயிலில் சிக்கினாா். இதனை அறிந்த ரயில் என்ஜின் ஓட்டுநா் ரயிலை நிறுத்தினாா். எனினும், ரயில் இருசக்கர வாகனத்தை ஒரு கிலோமீட்டா் தூரம் இழுத்துச் சென்றது. இச்சம்பவத்தில் பாஸ்கரன்உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.