செய்திகள் :

'தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இலவச ஒதுக்கீடு என்ன ஆனது?'- தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

post image

கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். ஆனால், அதற்கான அறிவிப்பை இன்னும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. இதுக்குறித்து கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

``மே பிறந்தும் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை: கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா?

தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25% இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிக்கை இன்னும் வெளியிடவில்லை.

மே மாதம் பிறந்து, பள்ளிகளுக்கான கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்னும் பெறப்படாதது கண்டிக்கத்தக்கது.

பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம்

மத்திய, மாநில அரசே...

2009-ஆம் ஆண்டின் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசு பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த பிரிவில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே செலுத்தி விடும் என்பதால் அக்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்கிறது.

ஜூன் மாதத்திற்கு முன்...

இந்த வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி கிடைக்கிறது. அந்த வகையில் இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். கல்வி உரிமை சட்டப்படி ஒதுக்கப்படும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும்.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் மே மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டு, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக மாணவர் சேர்க்கை முடிவடைந்து விடும்.

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாதது பல்வேறு யூகங்களையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இலவச கல்வி

கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்படும் குழந்தைகளுக்காக தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை வழங்குவதில் தேவையற்ற கால தாமதம் செய்யப்படுவது ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையானதாகி விட்டது.

இதற்கு முடிவு கட்டும் வகையில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதையே நிறுத்தி விட அரசு முடிவு செய்திருப்பதாக பரவும் செவிவழிச் செய்திகள் மக்களின் ஐயத்தையும், அச்சத்தையும் அதிகரிக்கி்ன்றன. இதைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கை இரு வாரங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது.

அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளிலும் கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். அதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, விண்ணப்பங்களையும் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Operation Sindoor: "மோடியின் பயணத்தை ரத்து செய்தவர்கள் சுற்றுலாப் பயணிகளைக் காக்கவில்லை" - கார்கே

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது, சவுத... மேலும் பார்க்க

Operation Sindoor : 'இந்தியாவுக்கு உரிய பதிலடியை கொடுப்போம்!' - பாகிஸ்தான் பிரதமர் எதிர்வினை!

'ஆப்பரேஷன் சிந்தூர்!'பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது 'ஆப்பரேஷன் சிந்தூர்' என்ற பெயரி... மேலும் பார்க்க

Operation Sindoor : 'இது ஓர் அவமானம்!' - இந்தியாவின் தாக்குதலுக்கு ட்ரம்பின் ரியாக்சன் என்ன?

'ஆப்பரேஷன் சிந்தூர்!'பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது 'ஆப்பரேஷன் சிந்தூர்' என்ற பெயரி... மேலும் பார்க்க

Operation Sindoor: 'பாகிஸ்தானில் இறங்கி அட்டாக் செய்த இந்திய இராணுவம்' - வெளியான முக்கிய தகவல்

'ஆப்பரேஷன் சிந்தூர்!'காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.#PahalgamTerrorAttackJu... மேலும் பார்க்க

'ஸ்டாலின் மாடல் ஆட்சி; சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி'- எடப்பாடி விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்' என்று ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் எதிர்கட்சி தலைவ... மேலும் பார்க்க

"நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அண்ணாமலை இன்னும்..." - திருமாவளவன்

ஈரோட்டில் நான்கு நாள்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகிறது.இவ்வாறிருக்க, இச்சம்பவத்தின்... மேலும் பார்க்க