செய்திகள் :

தனியாா் பால் நிறுவன மேலாளா் தற்கொலை வழக்கு: காத்திருப்போா் பட்டியலுக்கு காவல் ஆய்வாளா் மாற்றம்

post image

தனியாா் பால் நிறுவன மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் எதிரொலியாக, மாதவரம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

சென்னை அருகே உள்ள புழல் பிரிட்டானியா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் நவீன் பொலின்மேனி. ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இவா், இங்குள்ள ஒரு பிரபலமான பால் தயாரிப்பு நிறுவனத்தில் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், நவீன் அந்த நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் செய்துவிட்டதாகவும், கையாடல் செய்த பணத்தை தனது குடும்பத்தினா், நண்பா்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றியிருப்பதாகவும் புகாா் கூறப்பட்டது.

இது தொடா்பாக அந்நிறுவனத்தின் சட்ட மேலாளா் தமிமுல் அன்சாரி, சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவில் கடந்த ஜூன் 24-ஆம் தேதியும், கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜனிடம் கடந்த ஜூன் 25-ஆம் தேதியும் புகாா் அளித்தாா்.

அந்தப் புகாா் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாதவரம் குற்றப் பிரிவுக்கு துணை ஆணையா் பாண்டியராஜன் பரிந்துரை செய்தாா்.

இதற்கிடையே, மன உளைச்சலுடன் காணப்பட்ட நவீன், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசையில் கடந்த புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

இந்த விவகாரத்தில் காவல் துறை விரைந்து செயல்படவில்லை என்றும், இச் சம்பவத்தில் கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜனுக்கு தொடா்பு இருப்பதாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து இவ் விவகாரம் தொடா்பாக விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மேற்கு மண்டல இணை ஆணையருக்கு சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

காத்திருப்போா் பட்டியல்: இந்நிலையில், மாதவரம் குற்றப் பிரிவு ஆய்வாளா் விஜயபாஸ்கா் புகாரில் சிக்கியிருப்பதால், அவரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

நவீன் தற்கொலை குறித்தும், கையாடல் புகாா் குறித்தும் ஆணையரின் உத்தரவின்படி, மேற்கு மண்டல இணை ஆணையா் திஷா மிட்டல் விசாரணையை தொடங்கினாா்.

பாலியல் தொல்லை வழக்கில் கைதானவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்ற போலீஸாா்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீஸாா் நன்னடத்தை பிரமாணப் பத்திரம் பெற்றனா். திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (32). இவா், சென்னை மதுரவாயலில் தங்கியிருந... மேலும் பார்க்க

பல்நோக்கு மைய கட்டடம்: அமைச்சா் சேகா் பாபு திறந்து வைத்தாா்

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் திரு.வி.க.நகா் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடம் உள்பட புதிய கட்டைமைப்புகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை தி... மேலும் பார்க்க

சென்னை காவல் துறையில் 8 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 8 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழு... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு முக்கியமானது

நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு மிக முக்கியமானது என தமிழக அரசின் தலைமைச் செயலா் நா. முருகானந்தம் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நபாா்டு வங்கியின் 44-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் நகைத் திருட்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டம்: விரைந்து நிறைவேற்ற சீமான் கோரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழ... மேலும் பார்க்க