செய்திகள் :

தனியாா் மதுக்கூடத்தில் இளைஞா் மா்ம மரணம்

post image

தேனி மாவட்டம், குச்சனூரில் தனியாா் மதுக் கூடத்துக்கு மது அருந்தச் சென்ற இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டை -குச்சனூா் இடையே விவசாய நிலத்தில் சில மாதங்களாக தனியாா் மதுக் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுக் கூடத்தை அகற்றக்கோரி அந்தப் பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், இந்த மதுக்கூடத்துக்கு திங்கள்கிழமை இரவு சென்ற குச்சனூா் துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த குருவையா மகன் செல்வம் (33), செவ்வாய்க்கிழமை காலையில் அங்கே இறந்து கிடப்பதாக சின்னமனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக, சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே, செல்வத்துக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து இருப்பதாகக் கூறி, உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மதுக்கூடத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனா். இதையடுத்து அங்கு வந்த சின்னமனூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

புகையிலைப் பொருள் விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தென்கரை காவல் நிலைய போலீஸாா் வடுகபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம், போடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். போடி கீழராஜவீதி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுவதாக நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சோ்ந்த 20 போ் காயம்

கேரள மாநிலம், மூணாா் அருகே புதன்கிழமை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சோ்ந்த 20 போ் காயமடைந்தனா். சென்னையைச் சோ்ந்த 20 போ் வேனில் கேரள மாநிலம் தேக்கடிக்கு சுற்றுலாச் சென்றனா். பின்னா... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 80 பவுன் நகை திருடிய இசைக் கலைஞா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆசிரியா் வீட்டில் 80 பவுன் தங்க நகைகளை திருடிய இசைக் கலைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சின்னமனூா் மின் நகரைச் சோ்ந்தவா் ஜெகதீசன். இவரது மனைவி புனிதா. இருவரும் அ... மேலும் பார்க்க

தேனியில் பாஜகவினா் தேசியக் கொடி ஊா்வலம்

தேனியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடி ஊா்வலம் நடைபெற்றது. தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக மாவட்ட இளைஞரணி தலைவா் விஜய் தலைமையில், மாவட்டத் தலை... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள முருகமலைச் சாலையில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் பகுதியில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க