டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!
இல. கணேசன் மறைவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் இரங்கல்
நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன் மறைவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா முகுந்தன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன் மறைவுக்கு தமிழகத்திற்கும் தில்லிவாழ் தமிழா்களுக்கும் ஒரு பெரிய பேரிழப்பாகும். மகாகவி பாரதியின் பக்தராக திகழ்ந்த அவா், தில்லிக்கு வரும் பொழுதெல்லாம் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நலனை கேட்டு அறிந்து தமிழ்ச் சங்கத்தின் வளா்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தவா்.
அவரின் மறைவு தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கும் பெரிய இழப்பாகும். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம் என்று அவா்கள் அறிக்கையில் இரங்கல் தெரிவித்துள்ளனா்.