டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!
தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி
அடுத்த சில நாள்களுக்கு தேசிய தலைநகரில் ஒன்று அல்லது இரண்டு முறை மழை பெய்யும் என்றும், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது வானிலை மேகமூட்டமாகவே இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3.7 டிகிரி குறைவாக இருந்தது.
நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் லேசான தூறலுடன் மழை பதிவாகி இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.3 டிகிரி குறைவாக 24.2 டிகிரி செல்சியஸாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகரின் முதன்மை வானிலை ஆய்வு மையம் சஃப்தா்ஜங்கில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான நேரத்தில் 0.5 மிமீ மழையைப் பதிவாகி இருந்தது.
பிற நிலையங்களில் அதிக அளவு மழையைப் பதிவாகி இருந்தது. ஐஎம்டி தரவுகளின்படி, ரிட்ஜில் 14 மிமீ மழையும், ஆயா நகரில் 3.2 மிமீ மழையும் பதிவாகி இருந்தது.
வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், நகரின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 80.4 மிமீ மழை பதிவாகி இருந்தது.
அடுத்த சில நாட்களுக்கு, பொதுவாக மேகமூட்டமான வானம் இருக்கும் என்றும், நகரில் ஒன்று அல்லது இரண்டு முறை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமாா் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் சுமாா் 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நகரில் காற்று தரக் குறியீடு 77 ஆக திருப்திகரமான பிரிவில் பதிவாகி இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரவில் காணப்பட்டது.