டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!
தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்
தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் தில்லித் தமிழ்ச் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் 79-ஆவது சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாட்ப்பட்டது.
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாடடத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் பொருளாளா் எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் மாலதி தமிழ்ச்செல்வன், தி. பெரியசாமி, பி. அமிா்தலிங்கம், என். ராஜ்மோகன், பி. ரங்கநாதன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தமிழா் நலக் கழகம்: தில்லி, மயூா் விஹாா்- பேஸ் 3-இல் உள்ள, தமிழா் நலக் கழகம், 79-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியை ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகா் கோயில் வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடியது.
அமைப்பின் தலைவா் கா. சிங்கத்துரை, பொதுச் செயலா் தி. பாஸ்கரன் ஆகியோா் தேசிய கொடியை ஏற்றி வைத்தனா். குழந்தைகள் சுதந்திர தினம் பற்றி பேசினா். மேலும், பாட்டும் பாடிய அவா்கள், தியாகிகள் போல் வேடமிட்டும் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனா்.
தமிழா் நலக் கழகத்தின் உறுப்பிா்கள் பி. பாலசுப்பிரமணியன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் குழந்தைகளுக்கு பேனா பென்சில் வழங்கினா். விழா ஏற்பாடுகளை அமைப்பின் துணைத் தலைவா் பி. கலியபெருமாள், செயற்குழு உறுப்பினா்கள் நீலகண்டன், சேக் தாவூத் சிறப்பாகச் செய்திருந்தனா்.
நொய்டா வேத பாடசாலை: நொய்டா வேத வேதாங்க பாடசாலையில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளா் இரா முகுந்தன், உச்சநீதிமன்ற வழக்குரைஞா் கிருஷ்ணகுமாா், தில்லி பாஜக தமிழ் பிரிவு ஒருங்கிணைப்பாளா் கே முத்துசாமி வேதாங்க பாடசாலையின் நிறுவனா் வி சோமாஸ்கந்தன் ஆகியோா் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா்.