செய்திகள் :

தனுஷ்கோடி: இந்திய விசா மறுப்பு; காதலனுக்காகச் சட்டவிரோதமாக படகில் வந்த இலங்கை பெண்; போலீஸ் விசாரணை

post image

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நேற்று அதிகாலை இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீஸாருக்குத் தகவல் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற கடலோரப் பாதுகாப்பு குழுமம் மற்றும் க்யூ பிரிவு போலீஸார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் இலங்கை திரிகோணமலை மாவட்டம் ஆண்டான்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகனின் மகளான விதுர்ஷியா (24), 2003-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமடைந்த நிலையில் தனது பெற்றோருடன் அகதியாக இந்தியா வந்துள்ளார்.

விதுர்ஷியா

அப்போது பழனியில் உள்ள அகதிகள் முகாமியில் தங்கியிருந்துள்ளார். பின்னர் 2016-ம் ஆண்டு தனது பெற்றோருடன் விதுர்ஷியா இலங்கைக்கு விமானம் மூலம் திரும்பிச் சென்றார்.

இந்நிலையில் விதுஷியாவிற்கு அங்குக் கல்வி கற்கச் சிரமம் ஏற்பட்டதால் விமானம் மூலம் தமிழகம் திரும்பியுள்ளார். பழனிக்கு வந்த அவர் தனியாக வாடகை வீட்டில் தங்கி கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.

அப்போது தன்னுடன் படித்த கவி பிரகாஷ் என்பவருடன் காதல் கொண்டுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இலங்கை அடையாள அட்டை

ஆனால் விதுர்ஷியாவின் விசா காலம் முடிவடைந்ததால் திருமணம் செய்ய முடியாத நிலை உருவானது. இதனைச் சரிசெய்ய உரியக் காலம் முடிந்து கூடுதலாகத் தங்கியிருந்த நாள்களுக்கு அபராத தொகையினைச் செலுத்திவிட்டு மீண்டும் இலங்கையிலிருந்து முறையாக வரும் நோக்கத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றார். அங்கிருந்து இந்தியா வர இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்தபோது விதுர்ஷியாவுக்கு விசா மறுக்கப்பட்டது.

இதனால் காதலனைத் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்த விதுர்ஷியா, காதலுக்காக உயிரைப் பணயம் வைத்து தலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக படகில் தனுஷ்கோடி வந்தார். இதற்கென இலங்கை படகோட்டிகள் விதுர்ஷியாவிடம் இலங்கை மதிப்பிலான ரூபாய் 2 லட்சம் வாங்கிக் கொண்டு அவரை நேற்று முன் தினம் நள்ளிரவு அரிச்சல்முனை பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர் எனத் தெரியவந்தது.

இலங்கை குடியுரிமை அடையாள அட்டை

இதையடுத்து மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் விதுர்ஷியாவைத் தங்க வைத்த கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு!

தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக இன்றும் காலை ம... மேலும் பார்க்க

"அப்பாவி மக்கள்மீது பழிபோடுவதா..." - 207 அரசுப் பள்ளிகள் மூடலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கிறது.5 வயது நிரம்பிய குழந்தைகளின்... மேலும் பார்க்க

``என் வீட்டை இப்படிச் சுற்றி வளைப்பது எப்படி ஜனநாயகமாகும்?" - தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடத... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களை கைதுசெய்ய திட்டம்? | Privacy -ஐ பறிக்கும் New Income Tax Bill | Imperfect Show

* வருமான வரி மசோதா நிறைவேற்றம்: தனி மனித சுதந்திரங்களை பாதிக்கிறதா?* காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு: வேலை வாய்ப்புகளை உருவாக்கும் - நிர்மலா * மக்களவையில் நிறைவேறிய 2 முக்கிய மசோதா?* மத்திய அரசின் ... மேலும் பார்க்க