செய்திகள் :

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

post image

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

ஜூன் 19, 20 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 21 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை..

ஜூன் 19 முதல் 21 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்..

இன்று (19-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்: முதல்வா் ஆய்வு

மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் 2.30 கிலோ தங்கம் பறிமுதல்

அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.90 கோடி மதிப்பிலான 2.30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அபுதாபியிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிக... மேலும் பார்க்க

மோசடியாக பங்குகளை மாற்றியதாகக் குற்றச்சாட்டு: கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்

முன்னாள் மத்திய அமைச்சரும் மக்களவை திமுக உறுப்பினருமான தயாநிதி மாறன், தனது உடன் பிறந்த சகோதரா் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்பட 8 பேருக்கு வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். ஜூ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்: சீமான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவ... மேலும் பார்க்க

பெண் கோட்டாட்சியர் விபத்தில் பலி: ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகை, ரூ. 15 லட்சம் நிதியுதவி!

திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பலியான முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிதியுதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 19) சென்னை, கிண்டி, கத்திப்பாரா பகுதியில் நடை... மேலும் பார்க்க