செய்திகள் :

'தமிழ்நாட்டு மக்கள் 'விழிப்புணர்வு உள்ளவர்கள்; ஆளுநரின் பேச்சுக்கு இணங்கமாட்டார்கள்' - திருமாவளவன்

post image

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள், அவர்கள் ஆளுநரின் பேச்சுக்கு இணங்க மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தமிழகத்தில் இளைஞர்களுக்கு மும்மொழி தேவை என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறுகிறார். ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவே தமிழக ஆளுநர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பழமொழிகள் பேசுகின்றவர்கள் வாழ்கின்றோம். அதிலே ஒன்றுதான் ஹிந்தி.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைக் கட்டாயப்படுத்தி ஹிந்தி கற்க வேண்டும் என்று சொல்வது அவர்களின் ஆதிக்கப் போக்கை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

இதையும் படிக்க | 'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஹிந்தி அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட பிற மாநிலங்களிலும் ஹிந்தியை திணிக்கக் கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு.

தமிழ்நாட்டு மக்களை எதிர்காலத்தில் ஹிந்தி பேசும் மக்களாக மாற்றுவது, ஒரே தேசம், ஒரே மொழி என்று உருவாக்குவது ஹிந்திக்குப் பிறகு சமஸ்கிருதமே இந்தியாவில் ஒற்றை மொழி என மாற்றுவது என செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆர்.என். ரவி போன்றவர்களின் மாயாஜாலப் பேச்சுக்கு இணங்க மாட்டார்கள்" என கூறினார்.

2026 தேர்தலில் 25 இடங்களில் போட்டியிடுவதே தொண்டர்களின் எண்ணம் என வன்னி அரசு கூறியது குறித்துக் கேட்டதற்கு 'தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்' என்றார்.

மேலும் பேசிய அவர், "விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தல் பணியை தீவிரமாக செயல்படுத்த வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும், களமிறங்கி பணியாற்ற வேண்டும் என ஊக்கப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இயக்க தோழர்களை இயக்குவது, அணி திரட்டுவது என்னும் பொருளில் விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளோம்.

எனவே விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் அரசியல் காய் நடத்த முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது. திருமாவளவனை விலை கொடுத்து வாங்க முடியாது" என்றார்.

திருச்சி கரூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன், நிர்வாகி கிட்டு, மாவட்டச் செயலாளர் முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

முதல்வரின் ஒப்புதலுடன்தான் மாவட்டச் செயலாளர், அதிகாரிகளை மிரட்டினாரா? - அன்புமணி கேள்வி

மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணி அதிகாரியை ஒரு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஒருமையில் திட்டுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுத... மேலும் பார்க்க

ஆன்லைன் மோசடி! மியான்மரில் சிக்கிய 7,000 பேரைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட உள்ளனர். டிஜிட்டல் அரெஸ்ட், இணையவழி பண மோசடி உலகம... மேலும் பார்க்க

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு! துப்பாக்கியுடன் மிரட்டிய காவலாளி கைது!

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டுள்ளது. மேலும் சீமான் வீட்டு காவலாளி துப்பாக்கியை நீட்டி காவல்துறையினரை மிரட்டியதால் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

கோயில்களின் நிர்வாகம், பராமரிப்பு செலவிற்கான அரசு மானியம் உயர்வு!

கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக உயர்த்தப்பட்ட அரசு மானியத்திற்கான ரூ. 27 கோடிக்கான காசோலைகளை திருக்கோயில்களின் அறங்... மேலும் பார்க்க

மீண்டும் இணையும் மிஸ்டர் மனைவி தொடர் ஜோடி!

மிஸ்டர் மனைவி தொடரில் இணைந்து நடித்த பவன் - தேப்ஜானி ஜோடி புதிய தொடரில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடர் மிஸ்டர் மனைவி.வேலைக்குச் ச... மேலும் பார்க்க

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை(பிப். 28) சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவன... மேலும் பார்க்க