திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும்: அண்ணாமலை
தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசிய நித்யா மெனன்!
நடிகை நித்யா மெனன் தெலுங்கில் டப்பிங் செய்யும் விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலைவி படம் உருவாகியுள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
காதல் கதையாக உருவாகியுள்ள தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலாக வெளியான பொட்டல மொட்டாயே என்ற பாடல் இணையத்தில் வைரலானதுடன், தற்போதுவரை 1.29 கோடி பேர் பார்த்துள்ளனர்.
இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்று விஜய்சேதுபதி முன்னதாகத் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டப்பிங் செய்துள்ள நித்யா மெனன் விடியோ வெளியாகியுள்ளது.
Nitya Menen dubbing. pic.twitter.com/dEQ2T8EzHD
— July 25 - in THEATRES! (@paperboat27) July 17, 2025
தலைவன் தலைவி படத்தின் டிரைலர் இன்று (ஜூலை 17) வெளியாகியுள்ளது.