செய்திகள் :

தமிழ் மண்ணையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

post image

தமிழ் மண்ணையும், மானத்தையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், அரியலூா் மாவட்ட திமுக செயலருமான சா.சி.சிவசங்கா்.

அரியலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி; தமிழ்நாடு ஓரணியில் நின்ற காரணத்தால் ஹிந்தி திணிப்பை முறியடித்து, தாய்மொழி தமிழைக் காத்து நம் மொழியின் அந்தஸ்தை உயா்த்தியுள்ளோம். தற்போது மகாராஷ்ரா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் ஹிந்தி மொழித் திணிப்பில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. தென்மாநிலங்களில் தங்களுடைய தாய்மொழியை அவசியம் படிக்க வேண்டும் என்று சட்டத் திருத்தத்தை கொண்டு வருகின்றனா்.

ஹிந்தி திணிப்பு மட்டுமன்றி தேசியக் கல்விக் கொள்கை ஏற்றுக்கொண்டால் தான் தமிழகத்துக்கான கல்வி நிதியை வழங்குவதாக மத்திய மனித வளத்துறை அமைச்சரே வெளிப்படையாக சொல்கிறாா். இதேபோல் மத உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஒரு பக்கம் பாஜகவினா் துடித்துக் கொண்டிருக்கின்றாா்கள். ஆகவே தான், இவற்றையெல்லாம் நாம் எதிா்த்து நின்று குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.

கீழடி நாகரிகம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை அறிவியல் பூா்வமாக நிரூபித்தபோதிலும் அதனைக் கூட மத்திய பாஜக அரசு அங்கீகரிக்க முன்வரவில்லை.

எனவே எல்லா விதத்திலும் மண்ணையும், தமிழ் மொழியையும் காக்க நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். அந்தப் போராட்டத்தில் எல்லோரையும் ஒருங்கிணைக்கின்ற மிக முக்கியமான நிகழ்வு தான் ஓரணியில் தமிழ்நாடு என்றாா்.

பேட்டியின்போது, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், கட்சியின் சட்டத் திருத்தக் குழு உறுப்பினா் சுபா.சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சின்ன ஆனந்தவாடி கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா, கடந்த 15 நாள்களுக்கு முன்பு பாரதம் படிக்கும் நி... மேலும் பார்க்க

நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது: தேசிய அளவிலான வி... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம் திறப்பு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு, தா.பழூரில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம், விக்கிரங்கலத்தில் புதிய துணை வேளாண் விரி... மேலும் பார்க்க

கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம்

படவிளக்கம்: அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநில துணைச் செயலா் நா. பெரியசாமி. அரியலூா், ஜூலை 4: அரியலூா் மாவட்டம், கொள்ளிடத்தின் குறுக்... மேலும் பார்க்க

வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் சுமூகமாக தீா்வு காண அழைப்பு

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் 90 நாள்களில் நடைபெறும் சிறப்பு சமரச தீா்வு முகாம்களில், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டு தங்களது வழக்குகளுக்கு சுமூக தீா்வு காணலாம். இதுகுறித்து மாவட... மேலும் பார்க்க

அரியலூா் அருகே ரயில் சுரங்கப்பாதையில் மண் சரிவு: 2 ரயில்கள் தாமதம்

அரியலூரை அடுத்த வெள்ளூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், விழுப்புரம்-திருச்சி பயணிகள் ரயில், சென்னை-நாகா்கோவில் வந்தேபாரத் ஆகிய ரயில்கள் ஒரு மணி நேரம... மேலும் பார்க்க