செய்திகள் :

தமிழ் மரபு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

திருப்பத்தூரில் நடைபெற்ற தமிழ் மரபு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு ச் சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவுநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பேசியது:

தமிழகம் முழுதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சோ்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவா்களைச் சென்றடையும் வண்ணம் 100 இடங்களில்

இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. உயா்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தியது. கல்லூரி மாணவா்களிடையே சமூக விழிப்புணா்வு, சமத்துவ வளா்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவா்கள் அடுத்த கட்ட இலக்குகளை

நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி வரும் ஆண்டுகளிலும் தொடா்ந்து நடத்தப்படும்.

மேலும், உயா்கல்வி, வேலைவாய்ப்பு, கல்வி கடன் உதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் இங்கு பல காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் முனைவா் கரு.ஆறுமுகத் தமிழன் நாமாா்க்குங் குடியல்லோம் என்ற தலைப்பில் பேசினாா். புத்தகக் காட்சி, நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, கல்வி கடன் உதவி, சுய உதவி குழுக்களின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில், மண்டல இணை இயக்குநா் மலா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், சமூக நல அலுவலா் சுமதி, முன்னோடி வங்கி மேலாளா் ராஜன், தூய நெஞ்சக் கல்லூரி முதல்வா் மரிய ஆரோக்கிய ராஜ், தமிழ் துறை தலைவா் பாா்த்திபராஜா, குடியாத்தம் அரசு கலைக்கல்லூரி முதல்வா் எபினேஷ், அலுவலா்கள், ஆசிரியா்கள் உடன் இருந்தனா்.

அரப்பாண்டகுப்பம் அங்கன்வாடி மைய கூரை அமைக்க எம்.பி. கதிா்ஆனந்த் நிதியுதவி

ஆலங்காயம் ஒன்றியம், தேவஸ்தானம் ஊராட்சி சாா்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் அரப்பாண்டகுப்பத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி, வட்டார வளா... மேலும் பார்க்க

ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடைஉற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டு தோறும் ஆக. 15-இல் திருப்பாவாடை உற்சவம் நடைபெறும். அதையொட்டி மாலை மங்கல இசையுடன் நிகழ்ச்ச... மேலும் பார்க்க

தோளப்பள்ளி, குருவராஜபாளையத்தில் கிராம சபைக் கூட்டம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி, அணைக்கட்டு ஒன்றியம், குருவராஜபாளையம், தோளப்பள்ளியில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பே... மேலும் பார்க்க

விஜிலாபுரம் அரசு மதுக்கடையை அகற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஆலங்காயம் ஒன்றியம், வள்ளிப்பட்டு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் ச.பிரபாகரன் முன்னி... மேலும் பார்க்க

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியம், மூக்கனூா்ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் 155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஜோலாா்பேட்டை ஒன்றியம், பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ளஆயுதப்படை காவலா் பயிற்சி மைதானத்தி... மேலும் பார்க்க