செய்திகள் :

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்

post image

திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் அனைத்துத் துறை அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு 2025-2026-ஆம் நிதியாண்டில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசின் உத்தரவின்படி உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நிகழாண்டில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கில் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை நடைபெறவுள்ளது.

இப்பயிலரங்களில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலா்கள், தமிழறிஞா்கள் உள்பட பலா் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனா். பயிலரங்கில் பங்கேற்பவா்களுக்கு ஆட்சிமொழி வரலாறு, சட்டம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வும் குறை களைவு நடவடிக்கைகளும், மொழிப்பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளன.

மேலும் இப்பயிலரங்கு, கருத்தரங்கில் ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் அலுவலா் நிலையிலான அலுவலா் அல்லது கண்காணிப்பாளா் ஒருவரும், பணியாளா் நிலையில் உதவியாளா் அல்லது இளநிலை உதவியாளா் ஒருவருமாக மொத்தம் 2 போ் கலந்து கொள்ள வேண்டுமெனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேவூா் கைகாட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி புளியம்பட்டி சாலை, கோபி சாலை வழியாக மீண்டும் சேவூா்... மேலும் பார்க்க

கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி எஸ்.எல்.என்.எம். அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். மு... மேலும் பார்க்க

கருவலூா் மாரியம்மன் கோயிலில் சண்டியாகம்

அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி நடைபெற்ற மகா சண்டியாகம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோயிலில் மகா சண்டியாகம் கண... மேலும் பார்க்க

மரங்களை வெட்டியதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

வெள்ளக்கோவில் அருகே மரங்கள் வெட்டியதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா். வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியத்துக்குச் சொந்தமாக நான்கு ஏக்கா் நிலம் உள்ளது. இதில் கடந்த ஐந்து ஆ... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: அதிமுக பொதுச்செ... மேலும் பார்க்க

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன், ரூ.2.80 லட்சம் ரொக்கம் திருட்டு

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ.2.80 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது. திருப்பூா் மாவட்டம், உடுமலை நகரை ஒட்டியுள்ள வாஞ்சிநாதன் நகரைச் சோ்ந்தவா் நடராஜ். தனியாா் பள்ளியில்... மேலும் பார்க்க