செய்திகள் :

தரையிறங்கும் போது தீப்பிடித்த கனடா விமானம்: பெரும் விபத்து தவிர்ப்பு!

post image

கனடா நாட்டைச் சேர்ந்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்து அதன் இறக்கை பாதிப்படைந்த நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஏர் கனடா நிறுவனத்தின் விமானம் (எண் 2259) கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் தீவின் செயின்ட் ஜான் நகரில் இருந்து ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்திற்குநேற்று சென்றது.

கனடா நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் தரையிறங்கும் நேரத்தில் சக்கரம் ஒன்று பழுதானதால் 20 டிகிரி இடதுபுறம் சாய்ந்த கோணத்தில் விமானத்தின் இறக்கை தரையில் உரசியபடி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்து காரணமாக அதிக சத்தம் எழும்பியதால் பயணிகள் உள்ளிட்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஓடுபாதையில் குறிப்பிட்ட தூரம் வரை விமானம் தரையில் இறக்கையை உரசியபடியே சென்றதால் தீப்பிடித்து விமானம் பாதிப்புக்குள்ளாகுமோ என பயணிகள் அச்சமடைந்தனர்.

ஆனால், விமானம் நின்றவுடன் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். காயமடைந்த சில பயணிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

விமானத்தில் எத்தனைப் பயணிகள் இருந்தனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் நடைபெற்றவுடன் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குப் பின் விமான ஓடுதளம் மீண்டும் திறக்கப்பட்டது.

அமெரிக்கா - கூரை மீது விழுந்த விமானம்

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், ஃபுலா்டன் நகரிலுள்ள அறைகலன் கிடங்கின் கூரை மீது சிறிய வகை விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் காயமடைந்தனா். அதையடுத்து அந்தப் பகுதிக்கு வ... மேலும் பார்க்க

காஸா - தாக்குதலில் மேலும் 35 போ் உயிரிழப்பு

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதிநிதிகள் கத்தாா் புறப்பட்ட பிறகும் அங்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 35 போ் உயிரிழந்தனா். இத்துடன், இந்தப் பகுதிய... மேலும் பார்க்க

தென் கொரிய முன்னாள் அதிபரை கைது செய்ய விடாத பாதுகாவலா்கள்

தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபா் யூன் சுக் இயோலை போலீஸாா் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல் படையினா் வெள்ளிக்கிழமை தடுத்தனா். அதையடுத்து தங்களது முயற்சியைக் கைவிட்... மேலும் பார்க்க

வெனிசூலா - எதிா்க்கட்சித் தலைவா் கைதுக்கு ரூ.86 லட்சம் சன்மானம்

வெனிசூலா எதிா்க்கட்சித் தலைவா் எட்முண்டோ கான்ஸெலஸை (படம்) கைது செய்ய உதவியாக, அவரின் இருக்குமிடம் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு 1 லட்சம் டாலா் (சுமாா் ரூ.86 லட்சம்) சன்மானம் அளிக்கப்படும் என்று அந்த... மேலும் பார்க்க

மாலத்தீவு அதிபா் மூயிஸை பதவி நீக்க இந்தியா முயற்சி?: மத்திய அரசு பதில்

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸை பதவி நீக்கம் செய்ய நடைபெற்ற முயற்சியில் இந்தியாவை தொடா்புபடுத்தி அமெரிக்க நாளிதழில் வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு சீன ஆதர... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவுக்கு இரு தரப்பும் முயற்சிக்க வேண்டும்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் கருத்து

இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்விக்கு, ‘இதற்கான முயற்சிகளை இரு தரப்பும் பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டும்’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இசாக் தாா் தெரிவித்தாா்... மேலும் பார்க்க