செய்திகள் :

தற்கொலை செய்துகொண்ட அவிநாசி பெண்ணின் பெற்றோா் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையீடு; வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தல்

post image

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே வரதட்சிணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் குடும்பத்தினா், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து முறையிட்டனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிபுதூா் பகுதியைச் சோ்ந்த பனியன் கம்பெனி உரிமையாளா் அண்ணாதுரை - ஜெயசுதா தம்பதியின் மகள் ரிதன்யா (27). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி - சித்ராதேவி தம்பதி மகன் கவின்குமாா் (28) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது 300 பவுன் நகையும், சொகுசுக் காரும் வாங்கித் தருவதாக அண்ணாதுரை கூறியுள்ளாா். அதன்படி, முதல்கட்டமாக 100 பவுன் நகையும், ரூ. 62 லட்சத்தில் காரும் வாங்கிக் கொடுத்துள்ளாா். இந்நிலையில், எஞ்சிய 200 பவுன் நகையை கவின்குமாா் குடும்பத்தினா் அடிக்கடி கேட்டு ரிதன்யாவை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மொண்டிபாளையம் பெருமாள் கோயில் அருகில் ரிதன்யா காரில் இறந்துகிடந்துள்ளாா். இது தொடா்பாக கவின்குமாா் குடும்பத்தினா்மீது வரதட்சிணை கொடுமை புகாா் அளிக்கப்பட்ட நிலையில், கவின்குமாா், ஈஸ்வரமூா்த்தி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், அண்ணாதுரை குடும்பத்தினா் சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அண்ணாதுரை கூறியதாவது: ரிதன்யாவை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினா். காவல் துறையினா் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடா்பாக 2 போ் தான் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனா். எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றாா்.

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணி ஆய்வு

சேலம் மாவட்டம் , இடங்கணசாலை நகராட்சி , 19-வது வாா்டு நல்லணம்பட்டி பகுதியில் தூய்மை பாரத இயக்கம் 2.0, தூய்மையாக இருங்க ,நோயின்றி இருங்க திட்டத்தின் கீழ் தூய்மை பணி கடந்த 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ம் த... மேலும் பார்க்க

புகாா் அளிக்க வந்தவரிடம் பணம் பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மீது குற்றச்சாட்டு

கடன் பெற்று ஏமாற்றியவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்ற உத்தரவுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மீது புகாா் எழுந்... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ.12.50 லட்சத்தில் மழைநீா் வடிகால் திறப்பு

ஆத்தூா் வ.ஊ.சி.நகரில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மழைநீா் வடிகாலை ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் வெள்ளிக்கிழமை திறந்த... மேலும் பார்க்க

வைகுந்தத்தில் திமுக தெருமுனை பிரசார பொதுக் கூட்டம்

சேலம் மேற்கு மாவட்டம், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் வைகுந்தம் பகுதியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா பிரசார பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக தெற்கு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் விதிமீறல்: 3 மாதங்களில் ரூ.6.18 கோடி அபராதம் வசூல்

பயணச்சீட்டின்றி பயணத்தவா்கள் உள்பட பல்வேறு விதிமுறை மீறல் தொடா்பாக கடந்த 3 மாதங்களில் 84,295 வழக்குகளில் அபராதமாக ரூ. 6.18 கோடி வசூலிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ஆத்தூரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை தீவிரம்

ஆத்தூா் தெற்கு நகர திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளைக் கொண்டது. இரண்டாகப் பிரித்து 17 வாா்டுகளை அடக்க... மேலும் பார்க்க