தவறி விழுந்து தொழிலாளி பலி!
கோயிலில் பெயிண்ட் அடித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் சதுப்பேரி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் குமாா் (50), பெயிண்டா். இவா் கடந்த 4-ஆம் தேதி காலை கஸ்பா மாரியம்மன் கோயில் கோபுரத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்து உயா் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குமாா் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து குமாரின் மனைவி லட்சுமி அளித்த புகாரின்பேரில் வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.