தாணே: மாரடைப்பால் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரரின் உடல் அடக்கம்
தாணே: குஜராத் மாநிலம் வதோதராவில் மாரடைப்பால் உயிரிழந்த தொழிற் பாதுகாப்புப் படை வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிரம் மாநிலம் தாணே மாவட்டம், உல்ஹாஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் நிகாம்(39).மத்திய தொழிற் பாதுகாப்புப் படை வீரரான இவர், குஜராத்தில் உள்ள வதோதராவில் பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தாா் என்று அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு: ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் அதிகரிப்பு
இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடல் வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இதையடுத்து, 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரா்கள் மரியாதை செய்து உடலை அடக்கம் செய்தனா்.