தாமஸ் மெக்ஹாக்குக்கு முதல் பட்டம்
மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார் செக். குடியரசு வீரர் தாமஸ் மெக்ஹாக். மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக். குடியரசின் தாமஸ் மெக்ஹாக்கும்-ஸ்பெயினின் அலஜன்ட்ரோ போகினோவும் மோதினர். இதில் 7-6, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார் தாமஸ் மெக்ஹாக்.இது மெக்ஹாக் வெல்லும் முதல் ஏடிபி பட்டம் ஆகும்.
கடந்த ஆண்டு தரவரிசையில் 65-ஆவது இடத்தில் இருந்த தாமஸ், தற்போது 25ஆவது இடத்தில் உள்ளார்.
துபை ஏடிபி சிட்சிபாஸ் சாம்பியன்
துபை ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெஃப்பனோஸ் சிட்சிபாஸ் 6-3, 6-3 என்ற நேர்செட்களில் கனடாவின் பெலிக்ஸ் அலியாசைமை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் ஏடிபி 500 போட்டிகளில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சிட்சிபாஸ்.