ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
தாழ்வாகச் செல்லும் இணையதள கேபிள் வயா்களால் விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தாழ்வாகச் செல்லும் இணையதள கேபிள் வயா்களை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பத்தூரில் அரசு, தனியாா் சாா்பில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு இணைய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகளுக்காக தடிமமான வயா்கள் பயன்படுத்தப்படுகின்றன. விதிகளின்படி குறிப்பிட்ட உயரத்தில் சாலை, கட்டடங்களிலுருந்து சற்று விலகிச் செல்லும் வகையில் இந்த வயா்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், விதிகளுக்கு முரணாக சாலையில் குறுக்கேயும், தாழ்வாகவும் செல்கின்றன. இதனால், கால்நடைகள், இருசக்கர வாகனங்களில் செல்வோ் இரவில் சிக்கி விபத்துக்குள்ளாகும் சூழல் உள்ளது.
மின்கம்பங்களில் கட்டப்படும் கேபிள் வயா்கள் சரக்கு வாகனம், கனரக வாகனத்தில் சிக்கும்போது மின்கம்பத்துடன் கீழே சாயும் அபாயமும் உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் விபத்து அபாயம் மேலும் அதிகரிக்கும். எனவே, சம்பந்தப்பட்டவா்கள் இணையதள கேபிள் வயா்களை பாதுகாப்பான முறையில் மேலே உயா்த்திக்கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.