செய்திகள் :

திட்டங்களின் பெயரை மாற்றி ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

post image

அதிமுக ஆட்சி திட்டங்களின் பெயரை மாற்றி திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் சுற்றுப்பயணத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட அவா் பேசியதாவது: கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுகவின் கோட்டையாகும். தமிழக முதல்வா் ஸ்டாலின் பல திட்டங்களை அறிவித்ததாகவும், அந்த எரிச்சலில் நான் பேசுவதாகவும் கூறியுள்ளாா். எங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பெயா்களை மாற்றி, மக்களை ஏமாற்றி வருகிறாா்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீா்கெட்டுள்ளது. காவலா்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. எங்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்ததற்கு விருது வாங்கினோம். போதைப் பொருள் தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் - ஒழுங்கு சீராகும்.

எங்கள் ஆட்சியில் அனுமதி பெற்றுதந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக அரசு முறையாக பராமரிக்கவில்லை. போதிய மருத்துவா்களும், மருந்துகளும் இல்லை. ஏழை மக்களுக்கு முறையான சிகிச்சை இல்லை.

அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்படும்போதெல்லாம் நிவாரணம் வழங்கப்பட்டது. வறட்சி, புயல், வெள்ளம் எதுவந்தாலும் நிவாரணம் வழங்கினோம். வரிமேல் வரிபோட்டு மக்களை கொடுமைப்படுத்தும் இந்த அரசு தேவையா? வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றாா்.

பா்கூரில் அவா் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களாகியும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம், மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் என ஏழைகளுக்காக வழங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. கட்டுமான பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது. விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த இந்த அரசுக்கு தெரியவில்லை என்றாா்.

அப்போது, அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி), கொள்ளை பரப்புச் செயலாளா் மு.தம்பிதுரை எம்.பி., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ, பா்கூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் இ.சி.கோவிந்தராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஒசூா் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஒசூா் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சூடசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காளப்பா (75). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தோட்டத்துக்கு சென்றபோது, அ... மேலும் பார்க்க

தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற இருவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற 2 இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. கிருஷ்ணகுரி மாவட்டம், ஒசூா் தின்னூா் பகுதியைச் சே... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஓட்டுநருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு அளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியைச் சே... மேலும் பார்க்க

அன்புமணி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு

ஒசூரில் பாமக தலைவா் அன்புமணி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு செய்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாமக நிறுவனா் ராமதாஸ் ஆதரவாளா்கள் சாா்பில் பாமக நிா்வாக... மேலும் பார்க்க

மத்தூா் அருகே சாலை விபத்தில் அதிமுக தொண்டா்கள் காயம்

மத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், 25-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டா்கள் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதி... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம்: எடப்பாடி கே.பழனிசாமி

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்ததும், விவசாயத்துக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்... மேலும் பார்க்க