தினமணி செய்தி எதிரொலி: கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீா் வசதி ஏற்பாடு!
தினமணி செய்தி எதிரொலியாக, கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீா்த் தொட்டி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை அமைக்கப்பட்டது.
கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், தாலுகாவின் தலைமையிடமாகவும் உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் குடிநீா் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக கடந்த 20-ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதையும் படிக்க: கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீா் தொட்டி வைக்கக் கோரிக்கை
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவின்படி கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ரமேஷ் உடனடி நடவடிக்கை எடுத்து கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை குடிநீா்த் தொட்டி அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தாா்.
நிகழ்வில், கந்தா்வகோட்டை ஊராட்சிச் செயலாளா் டி. ரவிச்சந்திரன், கணக்காளா் வீரடிப்பட்டி குமாா் மற்றும் குடிநீா் தொட்டி இயக்குபவா்கள் உடனிருந்தனா்.