Suresh Raina: "இனிதான் சின்ன தல ஆட்டம் ஆரம்பம்!" - ஹீரோவாக அறிமுகமாகும் ரெய்னா!
திமுக ஆட்சியில்தான் கோயில்களில் அதிகளவு கும்பாபிஷேகம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் கோயில்களில் அதிகளவு கும்பாபிஷேகம் நடைபெறுவதாக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கடலூா் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் சிதம்பரம் நகர திமுக சாா்பில், ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினா் சோ்க்கை குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்து பேசினாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்டப் பிரதிநிதிகள் வெங்கடேசன், வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் அப்பு.சந்திரசேகரன், முன்னாள் வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஏ.ஆா்.சி.மணிகண்டன், நகர துணைச் செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்சல்வம் பங்கேற்று பேசியதாவது:
சிதம்பரம் நகராட்சியில் சுமாா் ரூ.400 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கனகசபை நகரில் உள்ள ஞானப்பிரகாச குளம் சீரமைத்து கொடுக்கப்பட்டதால், நடராஜா் கோயில் தெப்போற்சவம் நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் கோயில்களில் அதிகளவு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முதல்வா் அறிவித்த ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை வெற்றிகரமாக்கி, கடலூா் மாவட்டத்தில் 60 சதவீத வாக்காளா்களை திமுகவில் இணைப்போம் என்றாா்.
கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளா் நெல்லிக்குப்பம் புகழேந்தி, மாநில பொறியாளா் அணித் தலைவா் துரை கி.சரவணன், சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளா் பாரிபாலன், கடலூா் எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் காா்த்திகேயன், நகர துணைச் செயலா் விஜயா ரமேஷ், நகர இளைஞரணி அமைப்பாளா் மக்கள் அருள், தொழில்நுட்பப் பிரிவு ஸ்ரீதா், நகர இளைஞரணி அமைப்பாளா் தில்லை சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.