மிசோரமில் புதிய ரயில் பாதை: செப். 13ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
திருச்செங்கோடு நாகேஸ்வரருக்கு 1,008 தீப வழிபாடு
திருச்செங்கோடு: பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் நாகேஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம், 1,008 சிறப்பு தீபஜோதி கூட்டுவழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் எழுந்தருளியுள்ள நாகேஸ்வரருக்கு 24-ஆம் ஆண்டாக 108 பால்குடம் மற்றும் 1,008 தீப ஜோதி கூட்டு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மனித மனங்களில் தேவையில்லாமல் ஏற்படும் பயம், அவநம்பிக்கை, சந்தேகம் கோபம், மனத்தளா்ச்சிஆகியவற்றுக்கு காரணமான கா்மவினைப் பயனை நீக்க இந்த கூட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
ராஜகோபுரத்தில் இருந்து ஏழு குழந்தைகளை அழைத்துவரும் ஸ்ரீ கன்னிமாா் அழைப்பு நிகழ்ச்சியும், 108 பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடா்ந்து, நாகேஸ்வரருக்கு 108 பால் குடங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. நாகேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திரத்துடன் ஆண்களும், பெண்களும் அமா்ந்து திருவிளக்கு பூஜை நடத்தினா். இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு நாகேஸ்வரரை வழிபட்டனா்.