செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி, தோக்கவாடி, கொல்லப்பட்டி, குமாரமங்கலம், சீதாராம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வானப் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீா் புகுந்தது.
மழைநீருடன் கழிவுநீா்க் கலந்து சாலைகளில் ஓடியதால் பொதுமக்கள் அவதிப்பட்டன. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவா்கள், சாலையோர வியாபாரிகள், பணி முடித்து வீடு திரும்பியோா் அனைவரும் பலத்த மழையால் அவதிப்பட்டன.
வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சாலையில் ஊா்ந்து சென்றன. இதனால் திருச்செங்கோடு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் கடை வீதி, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.