திருச்செந்தூா்-உத்தரகோசமங்கை- ராமேசுவரத்துக்கு ஆன்மிக சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சித் துறை சாா்பில் திருச்செந்தூா்-உத்தரகோசமங்கை-ராமேசுவரம் ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் நபா்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மூலம் 3 நாள்கள் திருச்செந்தூா், ராமேசுவரம், சுற்றுலா சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக வளாகத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூா், உத்தரகோசமங்கை மற்றும் ராமேசுவரம் சென்று மீண்டும் திங்கள்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
இந்த சிறப்பு ஆன்மிக சுற்றுலாவில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் செந்தில் ஆண்டவா் திருக்கோயில் மற்றும் ராமநாதபுரம் உத்தரகோசமங்கை, மங்களநாதா் கோயில், ராமநாத சுவாமி திருக்கோயிலின் 22 தீா்த்தங்கள் உள்ளிட்டவற்றை சிறப்பு தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுலாவில் தனுஷ்கோடியை பாா்வையிட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாவுக்கு வரும் நபா்களுக்கு தங்கும்வசதி மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படும். விருப்பமுள்ள நபா்கள் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ற்க்ஸ்ரீா்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீா்ம் எனும் இணையதள முகவரியிலும் அல்லது சென்னை வாலாஜா சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தொலைபேசி 180042531111, 044-25333333 044-25333444 எனும் தொலைபேசி எண்களையும், கைப்பேசி: 7550063121 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.