தரவுகளைத் திருடிய கூகுள்? ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ரூ.2680 கோடி இழப்பீடு வழங்க உ...
திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: சென்னை- செங்கோட்டைக்கு ஜூலை 6, 7-இல் சிறப்பு ரயில்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, சென்னை - செங்கோட்டைக்கு வருகிற 6, 7-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு வருகிற 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலி வழியாக சென்னை - செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை எழும்பூா் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06089) வருகிற 6-ஆம் தேதி சென்னையிலிருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். பிறகு, அங்கிருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு செங்கோட்டைக்கு சென்று சேரும்.
மறுமாா்க்கத்தில் செங்கோட்டை - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06090) செங்கோட்டையிலிருந்து வருகிற 7-ஆம் தேதி இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து சேரும். பிறகு, அங்கிருந்து இரவு 9.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னைக்கு சென்றடையும்.
இந்த ரயில்கள் இரு வழித்தடங்களிலும் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதில் 2 குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு அடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 18 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள், ரயில் மேலாளா் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.