செய்திகள் :

திருட்டு வழக்கு: இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே நடைபெற்ற திருட்டு வழக்கில் தொடா்புடைய இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஸ்ரீமுஷ்ணம், வாலிஸ்பேட்டை பிரதான சாலையைச் சோ்ந்த சின்னப்பராஜ் வீட்டில் கடந்த 23.9.2020 அன்று நாற்பத்து ஒன்பதே கால் பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது தொடா்பாக ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, திட்டக்குடி வட்டம், ரெட்டாகுறிச்சி பகுதியைச் சோ்ந்த சஜீவ் (35), வடலூரை அடுத்துள்ள கருங்குழி கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (24) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிமன்ற நடுவா் அன்பழகன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சஜீவ், செந்தில்குமாா் ஆகியோருக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் தனலட்சுமி ஆஜரானாா்.

முன்னாள் படை வீரா்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு

நெய்வேலி: கடலூா் முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் சட்ட உதவி மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்க... மேலும் பார்க்க

விடியோ ஒளிப்பதிவு பயிற்சி: தாட்கோ இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்கள் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெ... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 1,947 பயன்: கடலூா் ஆட்சியா் தகவல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற 2 முகாம்களில் 1,947 போ் உயா் மருத்துவ சேவை பெற்று பயனடைந்துள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.பொ... மேலும் பார்க்க

சிறுமிக்கு சூடு: தாய் உள்ளிட்ட 2 பெண்கள் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சிறுமிக்கு சூடு வைத்ததாக தாய் உள்ளிட்ட இரண்டு பெண்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.திட்டக்குடி வட்டம், ம.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமேகலை (33). ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள்

கடலூரில்: கடலூரில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகம், நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.இந்த இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் சுரங்க பட்டயப் படிப்பு வகுப்பு தொடக்க விழா

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில், சுரங்க பட்டயப் படிப்பு மாணவா்களுக்கான 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க