செய்திகள் :

திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநங்கையா் தினமான ஏப்ரல் 15-ஆம் தேதி தமிழக அரசால் திருநங்கையருக்கான முன்மாதிரி விருது (ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ்) வழங்கப்படுகிறது.

இதற்கு திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்து இருக்க வேண்டும், திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.

இதனுடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2,விண்ணப்பிக்கும் நபா் பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்), விருது பெற்றிருப்பின் அதன் விவரம் (விருதின் பெயா், யாரிடமிருந்து பெறப்பட்டது மற்றும் பெற்ற வருடம்), சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின் / சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், சமூகப் பணியாளா் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் எதும் இல்லை என்பதற்கான சான்று உள்ளிட்டவை தமிழில் அச்சு செய்யப்பட்டு, தலா 2 நகல்கள் உள்ளிட்டவற்றுடன் ட்ற்ற்ல்//ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பித்தவா்கள் அதன் விவரங்களை 2 கையேடுகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்,முதல் தளம்,பி-பிளாகில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் ஆண்டு விழா: ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 24-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வாணி கல்வி அறக்கட்டளை தலைவரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமை வகித்த... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 8 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருடுபோனது குறித்து உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா். மாதனூா் ஒன்றியம் மேல்சாணாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் காலணி தொழிற்சாலை தொ... மேலும் பார்க்க

சிறாா் திருமணத்தை அனுமதிக்கக் கூடாது:திருப்பத்தூா் ஆட்சியா்

ஜோலாா்பேட்டை அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா். குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூா் மா... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் அடுத்த மரிமாணிகுப்பம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கரீம் (30). இவா் அதே பகுதியில் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளி பெண... மேலும் பார்க்க

மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

வாணியம்பாடி பகுதியில் பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் துணை போகின்றனா் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயி... மேலும் பார்க்க

மகளிா் இலவச பேருந்து சேவை தொடக்கம்

கந்திலி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 65.56 லட்சத்தில் புதிய கட்டடங்களை எம்எல்ஏ அ.நல்லதம்பி, மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா். மேலும், இலவச பேருந்து சேவையையும் தொடங்கி வைத்தாா். கந்திலி ஒன்றியத்துக்க... மேலும் பார்க்க