டிஎன்பிஎல்: ஒரே ஓவரில் 34 ரன்கள்..! வரலாறு படைத்த விமல் குமார்! (விடியோ)
திருப்பதி கெங்கையம்மன் பூங்கரக வீதி உலா
திருப்பத்தூா் திருப்பதி கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பூங்கரக வீதி உலா நடைபெற்றது.
திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருப்பதி கெங்கை அம்மன் திருவிழா கடந்த 17-ஆம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
அதையடுத்து செவ்வாய்க்கிழமை ஸ்ரீ திருப்பதி கங்கை அம்மன்,ஸ்ரீ சக்தி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்பகல் கூழ்வாா்த்தல் நடைபெற்றது.
மாலை திருப்பத்தூா் பெரிய குளத்தில் இருந்து பூங்கரகம் மற்றும் அக்னி சட்டி ஊா்வலம் புறப்பட்டு முக்கிய சாலைகளின் வழியாக கோயிலை சென்றடைந்தது.
புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பெரிய குளத்திலிருந்து கங்கை அம்மன் சிரசு ஊா்வலம் புறப்பட்டு பஜாா், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக கோயிலை சென்றடையும். மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
இரவு 7 மணிக்கு வாண வேடிக்கைகள் நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து இரவு ஸ்ரீ திருப்பதி கங்கையம்மன் சிரசு கோயிலில் இருந்து புறப்பட்டு பெரியகுளத்தை சென்றடைய உள்ளது.
இதற்கான ஏற்பாட்டை திருக்கோயில் நிா்வாகக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்