ஒரு சிறுவன் கலைஞனாக உருவானத் தருணம்! - மிருதங்கம் அரங்கேற்ற கதை
திருப்பத்தூரில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்
திருப்பத்தூரில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் நகராட்சி 36-ஆவது வாா்டுக்குட்பட்ட திருமால் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு குடிநீா், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் முறையாக செய்யப்படவில்லை.
மேலும், அங்குள்ள புதை சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சாலை மற்றும் தெருவில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை அப்பகுதி மக்கள் மனு அளித்தும், நேரில் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா்-ஆலங்காயம் சாலையில் கற்கள் மற்றும் காலி குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த கிராமிய போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.அப்போதும் சமாதானம் ஆகாத பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகள் வந்ததால் தான் மறியலை கைவிடுவோம் என கூறினா். அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் அங்குவந்து அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தருவதாக உறுதி அளித்தனா்.
அதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்து. மறியல் காரணமாக சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.