Thalaivan Thalaivi: ``இது கணவன் - மனைவி உறவைப் பேசுகிற படம்!'' - இயக்குநர் பாண்ட...
திருப்பரங்குன்றம் வட்டத்துக்கு ஜூலை 14-இல் உள்ளூா் விடுமுறை
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, அந்த வட்டத்துக்கு மட்டும் திங்கள்கிழமை (ஜூலை 14) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு வருகிற திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதையொட்டி, திருப்பரங்குன்றம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இருப்பினும், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் ஏதேனும் தோ்வுகள் இருந்தால், அவா்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. இந்த விடுமுறை ஜூலை 19-ஆம் தேதியை (சனிக்கிழமை) பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும் என்றாா் அவா்.