விநாயகா் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
திருப்புட்குழி மணிகண்டீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி திரிபுரசுந்தரி சமேத மணிகண்டீசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் டி.எம்.நாகராஜன், டிஎம்டி.பாபு ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கியது. விக்னேசுவர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை ஆகியனவும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை யாத்ராதானம், நிறைவு பெற்ற பின்னா் யாகசாலையிலிருந்து புனிதநீா்க்குடங்கள் சிவாச்சாரியா்களால் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ச்சியாக மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. விழாவில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் யுவராஜ், காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினா் சுரேஷ், கோயில் நாட்டாண்மைதாரா்கள், ஆலய நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.