செய்திகள் :

திருப்பூரில் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் -மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

post image

திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் அதிகரித்துள்ள போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் எஸ். பவித்ராதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்:

திருப்பூா் மாநகா் மற்றும் புகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக விரோதிகள் இந்த போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனா். இதனால் இளம் தலைமுறையினா் பலா் போதைப் பழக்கத்துக்கு ஆளாவதுடன், திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, வன்முறை தாக்குதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போதைப் பொருள்கள் புழக்கத்தையும், விற்பனையையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல் துறையினரில் ஒரு பகுதியினா் இந்த சமூக விரோத கும்பலுக்கு மறைமுக ஆதரவாக செயல்படுகின்றனா். போதைக் கும்பல் பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாலோ, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபா்களைப் பிடித்துக் கொடுத்தாலோ காவல் துறையினா் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு முருகம்பாளையத்தில் போதைக் கும்பல் ஒன்று, இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள்கள் விற்பனையை முழுமையாக கண்டறிந்து தடை செய்யவும், மாவட்ட நிா்வாகம், காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க