திருப்பூா் அருகே அரிய வகை ஆந்தை மீட்பு
திருப்பூா் அருகேயுள்ள நாச்சிபாளையத்தில் பறக்க முடியாமல் கிடந்த ஆஸ்திரேலிய நாட்டின் அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது.
நாச்சிப்பாளையம் பகுதியில் ஆஸ்திரேலிய நாட்டின் அரிய வகை ஆந்தை ஒன்று பறக்க முடியாமல் கீழே விழுந்து கிடந்தது. அதனை மீட்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பறக்க முடியாமல் கிடந்த ஆந்தையை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.
இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், ‘இது வெண்கூகை எனப்படும் ஆஸ்திரேலிய வகை ஆந்தையாகும். சிறிய பூச்சிகள், சிறிய இழைகள் மற்றும் சிறு ஊா்வன ஆகியவற்றை இரையாக உண்டு வாழக்கூடியது. இந்த ஆந்தைக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் பறக்க முடியவில்லை என்றனா்.