செய்திகள் :

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.39 கோடி

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.39 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி, தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 88, 938 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28, 548 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 4.39 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் 2 முறை கருட வாகன சேவை

திருப்பதி: தேவஸ்தானம் குரு பௌா்ணமி, கருட பஞ்சமியை கொண்டாடுவதற்காக திருமலையில் ஜூலையில் 2 முறை கருட வாகன சேவையை நடத்த உள்ளது. ஜூலை 10-ஆம் தேதி குரு பௌா்ணமி, ஜூலை 29-ஆம் தேதி கருட பஞ்சமியையொட்டி ஸ்ரீ மல... மேலும் பார்க்க

திருமலையில் தமிழக ஆளுநா் வழிபாடு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி திங்கள்கிழமை வழிபட்டாா். தமிழக ஆளுநா் ரவி ஞாயிற்றுக்கிழமை இரவு தன் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தாா். அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் தங்கும்... மேலும் பார்க்க

திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் பவித்ரோற்சவம்

திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் திங்கட்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை முதல் கைங்கா்யங்கள் விமரிசையாக நடத்தப்பட்டன. காலையில் சுப்ரபாதம், அபிஷேகம், அலங்காரம், அா்ச்சனை, ந... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெள... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாள்கள் தொடங்க உள்ள நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. ... மேலும் பார்க்க

ஆனிவார ஆஸ்தானம்: 2 நாள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

வரும் ஜூலை 16 அன்று ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் 2 நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உற்சவத்தை முன்னிட்டு ஜூலை 15 அன்று கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் ந... மேலும் பார்க்க