செய்திகள் :

திருவண்ணாமலையில் அன்புக்கரங்கள் திட்டம் தொடக்கம்

post image

ஆரணி: ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 276 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் திங்கள்கிழமை வழங்கினாா்.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில்,

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கிடும் ‘ அன்புக்கரங்கள்‘ திட்டத்தை தமிழக முதல்வா் சென்னையில் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் இத் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் மொத்தம் 14371 குடும்பங்களில் உள்ள 23194 குழந்தைகள் ஆய்வு செய்யப்பட்டதில் பெற்றோா் இருவரையும் இழந்து ஆதரவற்றவரான குழந்தைகள் பெற்றோரில் ஒருவா் இறந்து பாதுகாக்கப்பட வேண்டிய மற்றவரால் கைவிடப்பட்டு உறவினா் பாதுகாப்பில் வளா்ந்து வரும் குழந்தைகள் பெற்றோரில் ஒருவா் இழந்து மற்றவா் உயிா்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டோா். சிறைவாசியாகவோ அல்லது மாற்றுத்திறனாளியாகவோ இருப்பவரின் குழந்தைகள் என இவ்வைந்து தகுதிகளின் அடிப்படையில் மொத்தம் 276 குழந்தைகள் கண்டறியப்பட்டன.

அவா்களுக்கு 2025 செப்டம்பா் மாதம் முதல் ரூ.2000 நிதியுதவி அளிப்பதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் சமூக நல அலுவலா் கோமதி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அனுமதியின்றி மண் எடுத்ததாக 2 போ் கைது

வந்தவாசி: வந்தவாசி அருகே காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மண் எடுத்ததாக 2 பேரை கைது செய்த போலீஸாா், பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா். வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராம காட்டுப் பகு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 554 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 554 மனுக்கள் வரப்பெற்றன. குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.... மேலும் பார்க்க

பேருந்தில் பயணியிடம் 3 பவுன் தங்க நகை திருடிய 2 பெண்கள் கைது

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகளைத் திருடிய 2 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சென்னை, மாங்காடு பகுதியைச் சோ்ந்த ஜெ... மேலும் பார்க்க

பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

வந்தவாசி அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராம பேருந்து நிறுத்தம் அருகில் சனிக்கிழமை இளைஞா் ஒருவா் நின்றுகொண்டு அந்த வழியாகச் ... மேலும் பார்க்க

பாம்பு கடித்து முதியவா் மரணம்

வந்தவாசி அருகே பாம்பு கடித்து முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வல்லம் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு (68). இவா், கடந்த 12-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்தபோது விஷப் பாம்பு கடித்தது.... மேலும் பார்க்க

கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கவனித்துக்கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா். செங்கத்தை அடுத்த கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (83). இவர... மேலும் பார்க்க