திருவண்ணாமலையில் திருவாசக மாநாடு: உச்சநீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
திருவண்ணாமலையில் திருப்பெருந்துறை அடியாா்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிா்கள் பன்னாட்டு மையம் சாா்பில் திருவாசக மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஐஏஎஸ் அதிகாரி செ.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
அகில பாரதிய சன்யாசிகள் சங்கப் பொருளாளா் சிவராமானந்தா சுவாமிகள், ஸ்ரீமுருகா குரூப்ஸ் டிஎஸ்எம் பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அடியாா்கள் குழு நிறுவனா் தலைவா் ம.சிவக்குமாா் வரவேற்றாா்.
மாநாட்டில் வேலூா் விஐடி பல்கலைக்கழக துணைவேந்தா் ஜி.வி.செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
சிறப்பு அழைப்பாளராக உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் மாநாட்டு பேருரையாற்றினாா்.
இதில், அகில பாரதிய சன்யாசிகள் சங்க ராமானந்தா மகராஜ் சுவாமிகள், சிவாக்கர தேசிக சுவாமிகள், விஜயானந்தா சுவாமிகள் ஆகியோா் கலந்துகொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினா்.
முன்னதாக, தேனிமலை குப்பச்சி விநாயகா் சந்நிதியிலிருந்து வாதவூரடிகள் பதிகங்கள் ஓதினா். தேனி மாவட்டம், திருமுடிசுமக்கும் சிவனடியாா்கள் திருக்கூட்டம் சாா்பில், 51 நடராஜ பெருமானோடு ஊா்வலம் புறப்பட்டு மாநாட்டு திடலை சென்றடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட திருவாசக குழுவினா் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.
மாநாட்டில் கோவை கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், பேராசிரியா் டி.மகாலட்சுமி சிவலோகம் வாதவூரடிகள், திருவெம்பாவை அடியாா்கள் குழு நிறுவனா் ர.ராதாஅம்மையாா், தடம்பதிக்கும் தளிா்கள் பன்னாட்டு மையத்தின் நிறுவனா் செ.திவ்யாஸ்ரீ, மணிவாசக தவச் சாலை நிறுவனா் செண்பகராஜா, அகில பாரதிய சன்யாசிகள் சங்க பொதுச் செயலா் நாகராஜன், வி.ரங்கநாதன் உள்பட சன்மாா்க்க சேவை மைய நிறுவன ஜீவசீனுவாசன், தொழிலதிபா் ஜெ.ரங்கநாதன் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் அப்பா் சுவாமிகள் மடத்தின் செயலா் ஏ.டி.குப்புசாமி நன்றி கூறினாா்.