தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!
திருவரங்குளத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்கம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படு வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பூவரசக்குடி அரசுத் தொடக்கப்பள்ளியில், வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 9.96 லட்சத்தில் சுற்றுச்சுவா் கட்டும் பணி, வேப்பங்குடி ஊராட்சியில் சிறுபாசன ஏரிகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.6.9 லட்சத்தில் வெண்டன்குளம் தூா்வாரும் பணி, மணிப்பள்ளம் வேங்கடக்குளம் சாலை முதல் வம்பன் பகுதி சாலை வரை முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 4.48 லட்சத்தில் சாலை பலப்படுத்தும் பணி, வேப்பங்குடி ஊராட்சி, வம்பன் பகுதியில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.14.47 லட்சத்தில் தாா்ச் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், முத்துராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.