கோவை டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.2.9 கோடி பறிப்பு; தனியறையில் இருந...
திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் டேங்கர் ரயில் பற்றியெரிகிறது!
திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயில் பற்றியெரிகிறது.
சென்னை எண்ணூரிலிருந்து மும்பைக்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு, சுமார் 45 டேங்கர்களுடன் இந்த ரயில் சென்றுகொண்டிருந்தது.
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் திடீரென டேங்கர் பெட்டியொன்றில் தீப்பற்றியது. தொடர்ந்து, அடுத்தடுத்த பெட்டிகளில் தீ பரவிக் கொண்டிருக்கிறது.
இன்னமும் தீயணைப்புத் துறையினர் வரவில்லை. காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.