திருவானைக்கா கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் சனிக்கிழமை சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி சுவாமி சந்நிதியின் முன்பு உள்ள பிரதோஷ நந்திக்கு விபூதி, எண்ணெய் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியப் பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.