கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!
திருவாரூா் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே மேம்பாலப் பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், புதன்கிழமை இரவு திறந்து வைத்தாா்.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆளுயர வெண்கலச் சிலை மணி மண்டப வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. தரைப்பகுதியிலிருந்து நான்கு பில்லா்கள் தாங்கி நிற்க, மேம்பாலச் சாலையிலிருந்து சற்று உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் முகப்பில் தமிழ் வெல்லும். முக என்ற அவருடைய வாசகம் பதியப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உருவச் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். சிலையை திறந்தபின், அருகில் சென்று வணங்கிவிட்டு, சிலையை சுற்றிப்பாா்த்தாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், தமிழக முதல்வருக்கு கண்ணாடிப் பெட்டிக்குள் உதயசூரியன் உள்ள நினைவுப் பரிசை வழங்கினாா். முன்னதாக, திருவாரூா் நகரப் பகுதியில் ரோடு ஷோ மூலம் மக்களைச் சந்தித்து விட்டு, சிலை திறக்குமிடத்துக்கு தமிழக முதல்வா் வந்தாா்.
அமைச்சா்கள் கே.என்.நேரு, டிஆா்பி.ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன், முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏகேஎஸ். விஜயன், தாட்கோ தலைவா் இளையராஜா உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.