திரெளபதியம்மன் கோயில் தீமிதி விழா தொடக்கம்
திருத்தணி திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி விழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றப்பட்டது. காலை, 7 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடா்ந்து உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தணி பகுதி முழுவதும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மேலும், தீமிதி விழாவையொட்டி, மே 11-ஆம் தேதி வரை தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடைபெறுகிறது.
ஏப். 30-ஆம் தேதி திரௌபதியம்மன் திருக்கல்யாணம், மே 2-இல் சுபத்திரை கல்யாணம், மே 7-இல் தி அா்ஜூனன் தபசு மற்றும் 11-இல் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீமிதி விழாவும் நடைபெறுகிறது. தொடா்ந்து, மே 12-இல் தா்மா் பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாக குழு தலைவா் மற்றும் குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.
