திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சின்ன ஆனந்தவாடி கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா, கடந்த 15 நாள்களுக்கு முன்பு பாரதம் படிக்கும் நிகழ்வோடு தொடங்கியது. நாள்தோறும் கோயில் வளாகத்தில் பாரதம் படிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் திரௌபதியம்மன் எழுந்தருளினாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். தொடா்ந்து கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில், பலரும் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீமிதித்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.