செய்திகள் :

தில்லிக்கு இன்று ரெட் அலர்ட்! தொடர் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!

post image

தில்லியில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 29) அம்மாநிலத்துக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பருவமழை தொடங்கியது முதல், தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால், ஏராளமான முக்கிய நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் தலைநகர் தில்லியின் கிழக்குப் பகுதிகளில், இன்று (ஜூலை 29) கனமழை முதல் அதிக கனமழை பெய்யக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தில்லியின், ஐடிஓ, தௌலா குவான், நாரைனா, படேல் நகர், விஜய் சௌக், ஜாங்க்புரா, ஆர்.கே.புரம், லாஜ்பத் நகர், தால்கடோரா சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மிக கனமழை பெய்திருப்பது பதிவாகியுள்ளது.

விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்றினால், அந்நகரத்தில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்களின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள், தங்களது விமானங்கள் தாமதமாகக் கூடும் எனக் கூறி பயணிகளுக்கு ஆலோசனை அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

இதையும் படிக்க: பஹல்காம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்! அமித் ஷா

As monsoon rains intensify in Delhi, a red alert for heavy rains has been issued for the state today (July 29).

ஆபரேஷன் சிவசக்தி: இரண்டு பயங்கரவாதிகள் கொலை!

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் புதன்கிழமை காலை சுட்டுக் கொன்றனர்.உளவுத் துறை தகவலை அடுத்து ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளை தேடும் பணி, இந்திய... மேலும் பார்க்க

இந்தியாவை சுனாமி தாக்குமா? தேசிய சுனாமி ஆய்வு மையம் தகவல்

ரஷியா, ஜப்பானைத் தொடர்ந்து இந்தியாவை சுனாமி தாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் புதன்கிழமை காலை 8... மேலும் பார்க்க

விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் சௌஹான்

வேளாண் துறையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.விவசாயிகளின் வ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:சொந்த வருவாய்க்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு உதவும் மத்திய திட்டங்கள... மேலும் பார்க்க

"ஆபரேஷன் சிந்தூர்': இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்துக்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அத... மேலும் பார்க்க

புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் மேக்நாத் தேசாய் காலமானாா்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த புகழ்பெற்ற பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) செவ்வாய்க்கிழமை காலமானாா்.உடல்நல பாதிப்பு காரணமாக ஹரியாணா மாநிலம் கு... மேலும் பார்க்க